சிம்லா:
இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோலான் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தளமாக நாஹன் - குமர்ஹாட்டி சாலையை ஒட்டிய பகுதியில் 4 மாடிகள் கொண்ட சொகுசுவிடுதி ஒன்று உள்ளது. கடந்தசில நாட்களாக இங்கு கனமழை பெய்து வரும் நிலையில்,இந்த சொகுசு விடுதி திடீரெனஞாயிறன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் 42 பேர் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களில் 17 ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் ராணுவ வீரர்கள். இன்னும் 7 பேர் கட்டிடஇடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.